நீதிமன்றத்தை அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று காலை நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் பரவி வரும் வேளையிலேயே அவர் சட்ட விவகாரங்களுக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவரை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.