Date:

இரண்டு நபர்களை பாதுகாப்பதற்குப் பதிலாக இரண்டு கோடி மக்களை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்- சஜித்

இரண்டு நபர்களை பாதுகாப்பதற்குப் பதிலாக நாட்டின் இரண்டு கோடி மக்களை பாதுகாப்பதற்கு பாதுகாப்புப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனைவரும் ஜனநாயகத்துக்க மதிப்பளித்து செயற்படுவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து மக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதிப் போராட்டத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயற்படுமாறு தாம் அனைத்து பாதுகாப்புப் பிரிவினரையும் கேட்டுக்கொள்கிறோம். ஜனநாயகத்தை சீரழித்து மக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ள அவர்,ஒன்றுக்கொன்று முரண்பாடான தகவல்களை அரசு வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தருணத்தில் அமைதியாக ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து செயற்படுமாறு தாம் நாட்டு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...