இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் அலுவலகம் முன்னர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் விளக்கமளித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்றதும் அவசரநிலையை பிரகடனப்படுத்துவார் என பிரதமரின் பேச்சாளர் டினூக் கொலம்பகே தெரிவித்தார்.
பதில் ஜனாதிபதி என்ற வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு பதில் ஜனாதிபதி என்ற ரீதியில் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பல ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.