கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கும் இன்று (13) முதல் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் நாளாந்தம் 50,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்துக்கு இன்று 40,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.