இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, தனது கிராமியக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பின்தங்கிய பாடசாலையான அம்பாறை மாவட்டத்தின் வடிநாகல கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக கணினி மற்றும் பாடசாலை நூலகம் உள்ளிட்ட புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை அண்மையில் அன்பளிப்பு செய்தது.
சமூகப் பொறுப்புணர்வுள்ள நிததி நிறுவனமாக HNB FINANCE நிறுவனம் ‘நோக்கம்’ எனும் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் வீட்டுவசதி ஆகிய துறைகளின் முன்னேற்றம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு சமூகத்தை பலப்படுத்துவதற்காக தமது உச்ச அளவான பங்களிப்பை பெற்றுக் கொடுத்து வருகிறது.
HNB FINANCE PLC பல ஆண்டுகளாக பல்வேறு சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில் பின்தங்கிய சமூகத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பெரும் சேவைகளைச் செய்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளின் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமானவடினாகலை பாடசாலையை அடிப்படையாகக் கொண்டு அம்பாறை மாவட்டத்தில் இன்னுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதையும் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
தேர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் (2019-2022) சிரேஷ்ட உபதலைவர் நொயேல் ஜோசப் மற்றும் அதன் சிரேஷ்ட உபதலைவர் ஆகியோர் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில், கோவிட் தொற்றுநோய்களின் போது கூட, சமூகத்தை வலுப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம், ஏனெனில் இது எங்கள் சமூகப் பொறுப்பு.” என HNB FINANCE PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தெரிவித்தார்.