இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLCஇன் அம்பலாங்கொட கிளையானது, ஜூன் 8ஆம் திகதி அம்பலாங்கொடை (Roseth Junction) காலி வீதி, இலக்கம் 97இல் உள்ள புதிய அலுவலக வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
புதிய வளாகத்திற்கு பிரவேசிக்கும் நிகழ்வு HNB FINANCE PLCஇன், முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் HNB FINANCE PLCஇன் பிரதிப் பொது முகாமையாளர்கள், கிளை முகாமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
புதிய வளாகத்திற்கு இடம்மாறும் அதேநேரம் அம்பலாங்கொடை கிளையில் HNB FINANCE தங்கக் கடன் சேவையையும் ஆரம்பித்துள்ளது. HNB FINANCE அம்பலாங்கொடை கிளையானது லீசிங், சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக்கள், வணிகக் கடன்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் உட்பட பல நிதிச் சேவைகளை ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிக வசதிகளுடன் கூடிய புதிய சூழலுக்கு இடம்மாறி அதில் சிறந்த சேவையை வழங்குவதை நோக்காகக் கொண்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த HNB FINANCE PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “HNB FINANCE அம்பலாங்கொடை கிளையானது பதினேழு வருடங்களுக்கும் மேலாக அம்பலாங்கொடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளுக்கு இணையற்ற சேவையை வழங்கி வருகின்றது. இனிமேல், அம்பலாங்கொடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கு மிகவும் உகந்த, நம்பகமான மற்றும் கவர்ச்சிகரமான சேவையை வழங்கும் என்பதோடு எமது தங்கக் கடன் சேவை மத்திய நிலையம் ஊடாகவும் சிறந்த சேவையை வழங்க முடியுமென நான் நம்புகிறேன்.” என தெரிவித்தார்.