அலரிமாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குகின்றனர். இதில் இருவர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த ஒரு பெண் ஒருவரின் கழுத்து பகுதியில் பாரிய வெட்டுகாயமும் ஏற்பட்டுள்ளது.