Date:

நேற்று(7) இரவு இடம்பெற்ற எரிபொருள் நிலைய மோதலில் ஒருவர் பலி

காலி – மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கிடையே நேற்று(7) இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகியதுடன் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக தமது  காரில் பிரவேசித்த யடதுவ பிரதேசத்தைச் சேர்ந்த   நபரொருவர், தமது நண்பரின் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இருந்த சிறிய இடைவெளியினூடாக எரிபொருள் வரிசைக்கு நடுவே குறிந்த காரை நுழைக்க  முயன்றுள்ளார்.

அதன்போது, வரிசையில் காத்திருந்தவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ஹபராதுவ – யடகல பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒருவரே பலியானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...