நாட்டில் இன்று 15 அல்லது 20 வீதத்திற்கு இடைப்பட்ட பஸ்களே சேவையில் ஈடுபடும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 3 ஆயிரம் அல்லது 3 ஆயிரத்து 500க்கு இடைப்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடும் என அவர் கூறியுள்ளார்,
எரிபொருள் கிடைக்கப்பெறும் அளவிற்கு அமையவே பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டினார்.
தமக்கு டிப்போக்கள் மூலம் வழங்கப்படும் எரிபொருள் தொடர்பில் பல்வெறு சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.