Date:

மீண்டும் சீமெந்து விலை அதிகரிப்பு

50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து  200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை 3,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது.

ஒரு வருட காலத்திற்கு முன்னர் 50 கிலோ கிராம் சிமெந்து மூடை 900 ரூபாவாக காணப்பட்டபோதிலும், இந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் சீமெந்து மூடையின் விலை 6 சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் ஆகியன காரணமாக சீமெந்து மூடைகளை பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்வதில் பாரிய அசெளகரியங்களையும், போக்குவரத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக சிமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

சீமெந்து விலையேற்றம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் நிர்மாணத் துறையில் ஈடுபடுவோரும் தமது தொழிற்துறையில் பாரிய பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த கீதா கோபிநாத்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...