பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் அதி உச்ச பாதுகாப்பு வழங்கப்படும் பிரதான நுழைவாயிலுக்கு அண்மையில் இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.