மண்சரிவு அபாய எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் அடிப்படையில், நாட்டின் மேலும் பல பகுதிகளுக்கு 1ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் நாகொட, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை மற்றும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல ஆகிய பிரதேசங்களுக்கு 1ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுளை, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் நவித்திகல ஆகிய பிரதேசங்களுக்கும் 1ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

மழை தொடரும் பட்சத்தில் மண்சரிவு அபாயம் அதிகரிக்கக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#LandslideWarning #SriLanka #NuwaraEliya #sooriyannews #Srilanka #TruthAtAllCosts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கிங் கங்கை கரையோர மக்களுக்கான அறிவிப்பு

கிங் கங்கையைச் சூழவுள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்குச் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை...

நாவலப்பிட்டியில் பல வீடுகள் நீரில் மூழ்கின

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக...