இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (04) மற்றும் நாளைமறுதினம் (05) 3 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இன்று (03) அறிவித்தது.
அதற்கமைய, A முதல் W ஆகிய 20 வலயங்களில் பகல் வேளையில் 1 மணி நேரம் 40 நிமிடங்களும், இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
C வலயங்களில் காலை 6 மணிமுதல் 8.30 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் 30 நிமிட மின்வெட்டும், M,N,O,X,Y, Z ஆகிய வலயங்களில் காலை 5.30 மணிமுதல் 8 மணிவரை 3 மணிநேர மின்வெட்டும் அமுலாகும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.