எரிபொருள் வழங்குவதில் அறிமுகப்படுத்தப்பட்ட டோக்கன் முறையானது ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மாத்திரமே அமுல்படுத்தப்பட்டது. இனி இந்த டோக்கன் முறை நடைமுறையில் இல்லையென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த டோக்கன் முறை தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.