நோர்வூட் பிரதேசத்தில் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் இன்று அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நோர்வுட் பிரதேச தங்க நகை அடகு பிடிக்கும் கடையொன்றில் 2021 டிசம்பர் மாதம் 9ம் திகதியன்று குறித்த கொள்ளை சம்பவம் இடம் பெற்றதை தொடர்ந்து நோர்வூட் பொலிஸாரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியான தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபர்களிடம் இருந்து 54 தங்க சங்கிலிகள் ,757 தோடுகள் ,117 பெண்டன்கள் மற்றும் 18 வலையல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பிரதேசத்தை சேர்ந்த ஆண்கள் மூவரும் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.