பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுகெலே பகுதியில் 3 வயதுடைய குழந்தையொன்று மீன் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் முன்பகுதியில் இருந்த மீன்களை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் 2½ அடி ஆழமான தண்ணீர் தொட்டியில் விழுந்தே குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.
சம்பவத்தின் போது குழந்தையின் நான்கு உடன்பிறப்புகளும் பாடசாலைக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையும் தாயும் வீட்டில் இருந்த நிலையில், வீட்டின் முன் தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீன் தொட்டிக்குள் விழுந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் தெல்தெனிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.