நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், பொது மக்கள் தொடர்ந்தும் வரிசைகளில் காத்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்தும் முரன்பாடுகள் ஏற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.