கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சுமார் 600 கைதிகள் இவ்வாறு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், நிலையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, 232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கப்பி சென்றுள்ள ஏனைய நபர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்க்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.