ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பான முழுமையான விடயங்கள் விரைவில் வெளியிடப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.