போக்குவரத்து, சுகாதாரம், விமான நிலையம், புகையிரதம், துறைமுகம் மற்றும் முப்படை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஊடகங்கள் இவற்றில் உள்ளடக்கப்படவில்லை
ஊடக நிறுவனங்களுக்கு ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்