Date:

அக்குரஸ்ஸ பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்பு!

அக்குரஸ்ஸ, திப்பட்டுவாவ பிரதேசத்தில் இன்று (27) காலை தலைத்துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 70 வயதான மாந்திரீகர் ஒருவரென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி நபரை கொலை செய்த நபர், அந்நபரின் தலையை துண்டித்து, அவரது வீட்டிற்கு அருகில் ஓடும் நில்வளா கங்கையில் வீசியுள்ளதாக இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்தோடு சம்மந்தப்பட்ட நபர், கொல்லப்பட்ட நபரின் வீட்டுக்கு அண்மையில் வசித்துவருபவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்காக பல காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...

கம்பஹா தேவா விமான நிலையத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனக்...