Date:

மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை – யாழில் சம்பவம்

காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் இருந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் சாணை தவமணி வயது 78 என்ற மூதாட்டி எனவும் காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த மூதாட்டி அணிந்திருந்த நகைகள் எவையும் திருட்டுப்போகாத நிலையில் கொலைக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர், மூதாட்டி குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை கண்டு காங்கேசன்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...