கொழும்பு, பேலியகொட மீன் சந்தையில் நேற்று (21) விற்பனை செய்யப்பட்ட தலபத், கொப்பரா, பலயா உள்ளிட்ட பல வகை மீன்களின் மொத்த விலை 1000 ரூபாவுக்கு மேல் இருந்ததாக பேலியகொட மீன் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயசிறி விக்கிரமாராச்சி கூறுகிறார்.
நாளாந்தம் 200 லொறிகளில் மீன் கையிருப்பு வருவதாகவும் ஆனால் நேற்று 100 லொறிகளே வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று ஒரு கிலோ தலபத் மீனின் மொத்த விற்பனை விலை ரூ. 1600 மற்றும் கொப்பரா ரூ. 1800 , கெலவல்லா ரூ. 1700, இறால் ரூ. 1100, கணவாய் ரூ. 1300, லின்னா ரூ. 700 மற்றும் சாலை ரூ. 600, பலயா ரூ. 800க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.