Date:

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : 1000ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

கோஸ்ட் நகரிலிருந்து 44 கி.மீ தொலைவில் சுமார் 51 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 600 பேர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் வீடுகளும் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளை சிக்கியவர்களை மீட்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக நிவராண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் விரான் சமுதித்த சாதனை

இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192...

காசாவின் அமைதிக்கான சபையின் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது

காசாவின் அமைதிக்கான சபையின் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்க...

விபத்தில் சிக்கிய அசோக ரன்வலவின் மனைவி!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில்...

மலையக மக்களுக்கு வடக்கில் வீடுகள்.!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு, வடக்கில் வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியை...