எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வாராந்தம் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அதற்கமைய வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில், தெரிவு செய்யப்பட்ட 44 எரிபொருள் நிலையங்களில் சுகாதார பணியாளர்களால் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.