நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு எரிபொருள் கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக பிற மூலங்களிலிருந்து பெற்றோல் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பெற்றோலில் பல்வேறு இரசாயனங்களைக் கலந்து விற்பனை செய்வதில் மோசடி இடம்பெற்று வருவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சில முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் திட்டமிட்ட வகையில் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.