தற்போதைய அரசாங்கம் இருக்கும் வரை சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போதைய பிரதமர் பதவியில் இருந்து விலகி அனைத்து கட்சி அரசாங்கத்திற்கு புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.