Date:

சிறுமியின் சரீரத்தை மீள தோண்டியெடுத்து புதிதாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தின் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமி உடலை தோண்டியெடுக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் ஏழு மாதங்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான மேற்படி சிறுமி பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கடந்த 3 ஆம்திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சுமார் இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுமியின் மரணம் தொடர்பில் பெற்றோர் உள்ளிட்ட தரப்பினர் சந்தேகங்களை முன்வைத்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவிடம் இது தொடர்பான விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டன.

இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 30க்கும் அதிகமானோரிடம் காவல்துறையினர் வாக்குமூலத்தையும் பதிவுசெய்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் இன்றையதினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை கையளித்தார்.

தனது மகள் பணியாற்றிய வீட்டில் அவர் மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்பட்டுள்ளதாகவும், தமது மகள் வாக்குமூலம் வழங்கியதாகக் கூறப்படுவது தொடர்பிலும் விசாரிக்குமாறு இந்த முறைப்பாட்டினூடாக கோரியுள்ளதாக சிறுமியின் தாய் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

BREAKING லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக லிட்ரோ...

எரிபொருள் விலை அதிரடியாக குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை சிபேட்கோ...

எரிபொருள் விலை குறைவா..?

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின்...

நாளை கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட அறிவிப்பு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி...