இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இலங்கை எதிர்பார்த்துள்ள நிதி நிவாரணத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.