Date:

அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலியா டொலர் உதவி

இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளை வழங்கவுள்ளது.

இலங்கையில் உள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இது மருந்து, உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது.

இலங்கையில் உள்ள, 3 மில்லியன் மக்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய அவசர உணவு உதவிக்காக உலக உணவு திட்டத்திற்கு, அவுஸ்திரேலியா உடனடியாக 22 மில்லியன் டொலர்களை வழங்குவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா 2022-23 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 23 மில்லியன் டொலர்களை அபிவிருத்தி உதவியாக வழங்கவுள்ளது. இது சுகாதார சேவைகள் மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நன்கொடைகள் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படுவதாக உயர்ஸ்தானிகரத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரி நீக்கம்

இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரியை நீக்கி பெறுமதி சேர்...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றுக்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு...

மைத்திரி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சஜித் சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய தேசிய...