Date:

துனீசியாவில் முழுவதும் போராட்டம்-முடங்கிய நாடாளுமன்றம்

துனீசியாவில்  நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், பிரதமரைப் பதவி நீக்கம் செய்த அதிபர் நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

பொருளாதாரம் மற்றும் சமூக கொந்தளிப்பு காரணமாக நாட்டில் ஏற்கனவே அமைதியின்மை நிலவி வந்த நிலையில், கோவிட் தொற்றை அரசு சரியாகக் கையாளவில்லை என்ற மக்களின் கோபம் போராட்டத்திற்கு வழிவகுத்தது.

2019ல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் கைஸ் சையத், இனி ஆட்சியை தான் கவனித்துக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

அவரது ஆதரவாளர்கள் இதைக் கொண்டாடினாலும், அதிபர் கைஸ் சையத் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரபு பிராந்தியம் முழுக்க நடந்த அரபு வசந்த போராட்டத்திற்கு, 2011-ம் துனீசியாவில் தொடங்கிய புரட்சியே காரணம் என அடிக்கடி கூறப்படுவதுண்டு. ஆனால், இது அந்த நாட்டில் பொருளாதார ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கவில்லை.

குளறுபடியான தடுப்பூசி திட்டங்களால் கடந்த வாரம் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் நீக்கப்பட்டது, கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பும் மக்களின் நீண்ட கால கோவத்தை மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சிக்கு எதிராகவும் மற்றும் அவரது `என்ஹாடா` கட்சிக்கும் எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

“புரட்சிக்குப் பின்னர் இதுதான் மிகவும் மகிழ்ச்சியான தருணம்“ என லாமியா மெப்தாஹி எனும் போராட்டக்காரர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

துனிசியா

தலைநகர் துனீசில் நாடாளுமன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டூஜூரில் உள்ள என்ஹாடா கட்சி தலைமையகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், கணினிகளைச் சேதப்படுத்தியதுடன் கட்சி அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

“நாங்கள் இந்த முடிவுகளை எடுத்துள்ளோம் … சமூக அமைதி துனீசியாவிற்கு திரும்பும் வரையிலும், இந்த அரசைக் காப்பாற்றும் வரையிலும் இந்த முடிவு தொடரும்“ என அதிபர் கைஸ் சையத் கூறியுள்ளார்.

பின்னர் தலைநகர் துனிசில், மக்களின் கொண்டாட்டத்தில் அதிபரும் பங்கேற்றார்.

ராணுவப் படைகள் மூலம் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். “ஆயுதங்களை எடுக்கலாம் என நினைப்பவர்களுக்கு நான் எச்சரிக்கிறேன். யாராவது துப்பாக்கியால் சுட்டால், அவர்களுக்கு ராணுவம் துப்பாக்கியால் பதில் சொல்லும்“ என அதிபர் கைஸ் சையத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...

சீரற்ற காலநிலையால் 29000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

நடுக்கடலில் சிக்கிய கப்பல்; 14 பணியாளர்கள் மீட்பு

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில், தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய வர்த்தக...