இறக்குமதியாளர்களிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த வர்த்தகர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
பொருட்களை கொண்டு செல்வதற்கான கொள்கலன்களுக்கான கட்டணம் 5 மடங்காக அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.