Date:

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை

கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் சுமார் 350,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்களில் 60,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் அவசரமாக கடவுச்சீட்டை பெற வேண்டிய தேவை இல்லாதவர்கள், அதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக் கொள்வதாக திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவின் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பிரியந்த ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்வதற்காக அவசரத்திற்காக கடவுச்சீட்டு பெற அனைவரும் வரவில்லை என்பது வெளிநாடு சென்றுள்ளவர்களின் எண்ணிக்கை ஊடாக தெரியவந்துள்ளது. இது கடவுச்சீட்டு அலையாக மாறியுள்ளது. அதனை பார்த்தே ஏனையவர்களும் அவசரமாக கடவுச்சீட்டு பெற வருகின்றார்கள்.

உடனடியாக வெளிநாடு செல்வதற்கான அவசியம் இருந்தால் மட்டுமே இந்த நாட்களில் விண்ணக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவசியமில்லை என்றால் மக்கள் கூட்டம் குறைந்த பின்னர் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருநாகல் வைத்தியசாலையில் மருந்தாளுநர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்

குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்...

பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டம்...

பேருந்துகளில் AI தொழில்நுட்பம்

தூரப் பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு கெமரா கட்டமைப்பைப்...

இன்றும் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...