Date:

எரிபொருள் விநியோகத்திற்கு தடையாக வந்த காகம்

ஐந்து நாட்களுக்குப் பின்னர் இன்று (18) பிற்பகல் பண்டாரகம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஒரு தொகை பெற்றோல் கிடைத்துள்ளது.

 

எரிபொருளைப் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்ற பெருமளவான மக்களுக்கு எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட போது அப்பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

வெடிப்பு சம்பவத்துடன் அப்பகுதிக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

அருகில் இருந்த மின்மாற்றியில் காகம் ஒன்று மோதியதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது தெரியவந்தது.

 

பின்னர், மின்சார சபை அதிகாரிகள் வந்து பழுதை சரிசெய்து மின் விநியோகத்தை சீரமைத்தனர்.

 

அதன்படி சுமார் அரை மணி நேரம் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்...

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...