சிறுபோகத்தில் வழமையாக பயிரிடப்படும் ஐந்து லட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில், தற்போது 475,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அறுவடை கிடைக்கப்பெற்ற பின்னர், எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு அல்லது உணவு நெருக்கடி ஏற்படாது என்று அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் தற்போதும் சிறுபோகத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பை உரியவாறு அடையாளம் கண்டு அவற்றுக்கு உரத்தை வழங்குவதற்கான முறைமை தயாரிக்கப்படவில்லை என ஒன்றிணைந்த விவசாய சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.