Date:

பிள்ளையை களனி கங்கையில் வீசி, தாமும் தற்கொலை முயற்சி – பெண் கைது

வத்தளை – கதிரான பாலத்திற்கருகில் தமது பிள்ளையை களனி கங்கையில் வீசி, தாமும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து குறித்த பெண் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி கங்கையில் வீசப்பட்ட 5 வயது பிள்ளையைத் தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வத்தளை – ஹெந்தல பகுதியைச் சேர்ந்த 42 வயதான தாயொருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் இன்று(16) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...