Date:

எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

எதிர்வரும் நாட்களில் கிழங்கு, பருப்பு, வெங்காயம், சீனி மற்றும் அரிசி ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், செத்தல்மிளகாய், கடலை, நெத்தலி உள்ளிட்டவற்றிற்கும் பெருமளவு தட்டுப்பாடு ஏற்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக திறந்த கணகீட்டு முறைமை இல்லாது செய்யப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நிலைமை ஏற்ப்பட்டுள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

மேலும், இதனால், இறக்குமதிக்கு தேவையான டொலரை உரிய வகையில் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, இந்தியாவின் ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, சக்கரை, கோதுமைமா உள்ளிட்ட சில பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.

மேலும், சீனி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும்  அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T - 56...

இலங்கை மாணவர்களுக்கு சீனாவின் புலமைப்பரிசில்

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை...

அனுர- மோடியால் பெரும் பதற்றம்

"அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

“வெள்ளைக்கார பெண்களுக்கு பிரேமதாச உள்ளாடை தைக்கிறார்”

ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச...