Date:

ஏலம் பறிக்கச் சென்ற பெண்ணுக்கு நடந்தது என்ன ?

இறக்குவானை-  சூரிய கந்த தோட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர், ஏலம் பறிக்கச் சென்று காணாமல் போயுள்ளார்.

49 வயதுடைய எஸ்.மனோ ரஞ்சனி என்ற பெண், கடந்த மூன்றாம் திகதி சூரியகந்த பகுதியினுடாக சிங்கராஜ வனப்பகுதிக்கு ஏலம்  பறிக்கச்  சென்றுள்ளார்.

தனது கணவன் மற்றும் மகனுடன் குறித்த பெண் சிங்கராஜ வனப்பகுதிக்குள் சென்று காணாமல் போனதாகவும், இதனையடுத்து அவரது கணவரும் மகனும் காட்டில் பல மணி நேரங்கள் தேடியும் மனோ ரஞ்சனியை கண்டு பிடிக்க முடியவில்லை.

பின்னர் தந்தையும் மகனும் வீட்டுக்கு வந்து அயலவர்களிடம் தெரிவித்துள்ளதுடன்,  சூரியகந்த பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஊர் மக்களும் காட்டுக்குள் சென்று, அந்த பெண்ணைத் தேடிய போதிலும் அதில் எந்த விதமான பயனும் கிடைக்க வில்லை.

இதனையடுத்து, குருவிட்ட இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், பொலிஸார்,  அத்தோட்ட மக்களுடனும் இணைந்து அப்பெண்ணை, மூன்று நாட்களாக தேடும் பணியில்  ஈடுபட்டு வந்த நிலையிலும் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

ஏ.எஸ்.எம்.ஜாவித் . 2025.08.14 பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 79வது ஆண்டு விழா இன்று இலங்கையில்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...