Date:

எரிபொருள் மற்றும் எரிவாயுக்கு அவசியமான டொலரை வழங்க பிரதமர் இணக்கம்

எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணங்கியுள்ளார்.

வங்கிகளுக்கு இடையில் நிலவிய தொழிநுட்ப கோளாறு காரணமாக கட்டணங்களை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

சில இடங்களில் அமைதியின்மை சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

ஒருகொடவத்த பகுதியில் நேற்றிரவு எரிபொருள் கோரி மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதோடு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு விநியோகம் தொடர்ந்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

3,900 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலுக்கு கட்டணம் செலுத்த முடியாமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

7 நாட்களாக குறித்த கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட...

2026 வரவு செலவு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

நீர்ப்பாசனத் துறைகளின் ஊடாக பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை.பெறுவது தொடர்பில் 2026 வரவு...

மீண்டும் இலங்கையில் எலிக்காய்ச்சல்

இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்...

வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் 15 ஆம் திகதி ஹர்த்த்தால்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி...