Date:

அத்தியாவசிய மருந்துகளை வாங்க வைத்தியர் ஷாபி நன்கொடை

நீதிமன்றத்தில் இணங்கியவாறு குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி அவருக்கு 26 இலட்சம் ரூபா நிலுவை சம்பளத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்தத் தொகையை நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நன்கொடையாக வழங்குவதற்கு அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்களுக்கு கருத்தடை செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்து ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், அவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.

எனினும் 2019 ஆம் ஆண்டில் குருநாகல் நீதிமன்றத்திற்கு அறிவித்த சீஐடியினர், அவர் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இதேவேளை, அவருக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை சம்பளத்தை செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு இணக்கம் வெளியிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் 15 ஆம் திகதி ஹர்த்த்தால்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி...

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண்கள் கைது

தெஹிவளையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது...

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றிய லொறி

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி ஒன்று, தடுப்பு...

வௌிநாட்டு பெண்ணொருவர் கடலில் மூழ்கி பலி

மொரகல்ல கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த தாய்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி...