Date:

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்பணம் செலுத்த வேண்டும்- இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம்

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படுமென  இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்பணம் செலுத்த வேண்டுமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் எரிபொருள் கிடைத்த பின்னரே பணம் செலுத்தப்பட்டதாக  இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், முற்பணம் செலுத்தி எரிபொருள் கொள்வனவு செய்யும் போது காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுமோ என்ற நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் 400 எரிபொருள் நிலையங்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும், முற்பணம் செலுத்தும் நிலையில் மேலதிகமாக உள்ள எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்க வேண்டிய நிலைமை ஏற்படுமென அவர்கள் கூறுகின்றனர்.

இதனால், விநியோக நடவடிக்கைகள் சிக்கலடையும் நிலைமை காணப்படுவதாக இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாவது தடவையாகவும் செம்பியனாகி இந்தியா சாதனை!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக...

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று...

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...