எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பதற்கு, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைத்துள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவுக்கும், அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தூரப் பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை, அருகிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை, பிரயோக ரீதியாக பயன்படுத்துவதற்கான முறைமை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எமது செய்திச் சேவைக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.