அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை கலைக்கவே பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ருஹூணு, களனி ஆகிய பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும், அநீதியாக வழங்கப்பட்ட மாணவ உதவித் தொகை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.