கடந்த சில வாரங்களாக வாகனங்களின் விலை குறைவடைந்துள்ளதாக இரண்டாம் தர கார் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சுமார் 3 தசம் 6 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த Alto காரின் விலை தற்போது 3 தசம் 1 மில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்கலாமென விநியோகஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.