Date:

ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு – ஜனாதிபதியிடம் கோரிக்கை

நீண்டகால அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்குமாறு  9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள்   ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில்   ரஷ்யாவிடம் இருந்து  எரிபொருள் கொள்வனவு செய்து நாட்டை இக்கட்டான நிலையில் இருந்து நாட்டை  மீட்பதற்கு தமது கட்சிகள் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு பின்வாங்க போவதில்லை எனவும்   தெரிவித்துள்ளனர்.

எனவே  தங்களது கோரிக்கை தொடர்பில்   கலந்துரையாடுவதற்கு விரைவில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென  9 கட்சிகளின் தலைவர்களும் கடித்தில் வலியுறுத்தியுள்ளனர்

இதேவேளை நாட்டில்  நிலவும்  எரிபொருள் நெருக்கடி   தொடர்பில்  ஆட்சியாளர்கள் பொறுப்பின்றி  செயற்படுவதாகவும்  09 கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...