நாட்டில் உள்ளக மற்றும் வெளியக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சுவாசக் கோளாறுகள் மற்றும் நோய் அறிகுறிகள் காணப்படும் நபர்கள் முகக்கவசம் அணியவும் சமூகப் பொறுப்புடன் செயற்படவும் வலியுறுத்துவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.