நாளை எரிவாயுவை வழங்குவதற்கான சாத்தியம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 3,900 டன் எரிவாயுவை இறக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதால் நாளை முதல் 50,000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க முடியும் என நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6 நாட்களுக்கு குறித்த எரிவாயுவை விநியோகிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்த போதிலும் இன்று மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.






