ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பஸில் ராஜபக்ஸ நாளைய தினம் விசேட ஊடக சந்திப்பொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப்பிரிவு இன்று இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாகவும், அதன் பின்னர் அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.