ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தமது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு, பிரசன்ன ரணதுங்க தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு மேல் நீதிமன்றில் கையளித்துள்ளார்.
வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 25 மில்லியன் ரூபா பெறுமதியான உறுதிமொழி பத்திரங்களை பலவந்தமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (6) தீர்ப்பளித்தது.
வர்த்தகர் ஒருவரிடம் 64 மில்லியன் ரூபாவை கப்பமாகக் கோரி அச்சுறுத்தியதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மற்றும் மற்றுமொரு நபர் என மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.