எதிர்வரும் மூன்று வாரங்கள் இலங்கைக்கு கடினமானதாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிலைமையை நாம் ஒற்றுமையாக பொறுமையாக எதிர்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதமரின் உரையில் இருந்து பத்து முக்கிய விடயங்கள் பின்வருமாறு:
1.பொதுமக்கள் எரிபொருளை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு வேண்டுகோள்.
2.பொதுமக்கள் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தல்.
3. தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படும்.
4. நெல் மற்றும் பிற பயிர்களுக்கு உரம் இறக்குமதி செய்ய ஆண்டுக்கு 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.
5.நாட்டிற்குத் தேவையான மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான பல்வேறு சர்வதேச உதவித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
6.அடுத்த ஆறு மாதங்களுக்கு நாட்டை மிதக்க வைக்க இலங்கை 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
7.தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் இலங்கையின் எதிர்கால பொருளாதாரத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை.
8.வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பல பிரதிநிதிகள் இலங்கைக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
9. மனிதாபிமான உதவியாக நான்கு மாத காலத்திற்கு 48 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கான உலகளாவிய பொது வேண்டுகோளை ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்துள்ளது.
10. அரசாங்கத்தின் தேவையற்ற செலவினங்களைக் குறைக்கும் இடைக்கால வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.